விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ஆர்யன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் கடைசியாக ‘லால் சலாம்’ திரைப்படம் வெளியானது. அதன் பின்னர் நேற்று (அக்டோபர் 31) ‘ஆர்யன்’ திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை விஷ்ணு விஷால் தனது விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருந்தார். ஜிப்ரான் இதற்கு இசையமைத்திருந்தார். பிரவீன் கே இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், செல்வராகவன், மானசா ஆகியோர் நடித்திருந்தனர். ‘ராட்சசன்’ படத்தைப் போல் க்ரைம் திரில்லர் இன்வெஸ்டிகேஷன் ஜானரில் உருவாகியிருந்த இந்த படத்தில் விஷ்ணு விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படமானது மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் நேற்று கிட்டத்தட்ட 800-க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் செல்லும் இந்த படத்தில் விஷ்ணு விஷால், செல்வராகவன் ஆகியோர் தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வரும் இந்த படம் வெளியான முதல் நாளில் ரூ.1 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது எனவும் இனிவரும் நாட்களில் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


