நடிகை ஆத்மிகா ‘கண்ணை நம்பாதே’ திரைப்படத்தை தனது தாத்தாவுடன் பார்த்துள்ளார்.
இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘கண்ணை நம்பாதே‘. இப்படம் கடந்த 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
2018-ஆம் ஆண்டு வெளியான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்‘ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மு. மாறன். இவர் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ‘கண்ணை நம்பாதே’.
சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் பல முன்னணி நடிகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இப்படம் கடந்த 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. இவர் ‘கண்ணை நம்பாதே’ திரைபடத்தில் நடிகையாக நடித்துள்ளார்.
இவர், இந்திரைப்படத்தை தனது தாத்தாவுடன் பார்த்துள்ளார். இதனை சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
மேலும், அதில், “மகிழ்ச்சி என்பது உங்கள் தாத்தாவின் முகத்தில் பெருமிதம் பிரகாசிப்பதை பார்ப்பது. 90 வயதிற்கு மேற்பட்டவர் அவரது பேத்தி படத்தைப் பார்க்க சிரமமின்றி படிக்கட்டுகளில் ஏறினார். விலைமதிப்பற்ற இந்த தருணங்கள் என்றென்றும் பொக்கிஷமாக இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
Happiness is seeing your Thatha’s face beaming in pride!!!
He is easily 90+ and effortlessly climbed stairs to watch his granddaughter film #kannainambathey Precious are these moments that I will treasure forever ❤️ pic.twitter.com/yIz7izUPqB— Aathmika (@im_aathmika) March 24, 2023