- Advertisement -
1990-களில் ரசிகைகளின் மனம் கவர்ந்த நாயகனாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் நினைவுக்கு வரும் அளவு அவரது முகம் கோலிவுட் ரசிகர்கள் மனதில் பதிந்துபோனது. இவர் தமிழில் பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். 1996-ம் ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் படத்தின் மூலம் இவர் நாயகனாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். ரஜினிகாந்துடன் இணைந்து படையப்பா மற்றும் கமல்ஹாசனுடன் இணைந்து பம்மல் கே.சம்பந்தம் என பல படங்களில் நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு திருட்டு பயலே படத்தில் அப்பாஸ் நடித்திருந்தார்.

இறுதியாக மலையாளத்தில் வெளியான பச்சக்கள்ளம் எனும் திரைப்படத்தில் அப்பாஸ் நடித்தார். இதனிடையே எரும் அலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். தனது குடும்பத்துடன்வெளிநாட்டில் நடிகர் அப்பாஸ் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில், சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும்போதே சூழ்நிலை காரணமாக கழிவறை சுத்தம் செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.




