Homeசெய்திகள்சினிமாஎனக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது.... நடிகர் அஜித் ஓபன் டாக்!

எனக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது…. நடிகர் அஜித் ஓபன் டாக்!

-

- Advertisement -

நடிகர் அஜித், தனக்கு இருக்கும் பிரச்சனை குறித்து பேசி உள்ளார்.எனக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது.... நடிகர் அஜித் ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் தனது திரைப்பயணத்தை தொடங்கி ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருப்பவர் நடிகர் அஜித். இவர் கடைசியாக விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்திருந்தார். அடுத்தது மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கூட்டணி அமைத்து ‘ஏகே 64’ படத்தில் நடிக்க உள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சிறு வயதில் இருந்தே கார் பந்தயத்தில் ஆர்வமுடைய அஜித், தொடர்ந்து பல கார் ரேஸிங்கில் தனது அணியினருடன் பங்கேற்று வெற்றி பெற்று வருகிறார். அந்த வகையில் துபாய், பெல்ஜியம் நாடுகளைத் தொடர்ந்து ஸ்பெயின் நாட்டிலும் நடந்த கார் பந்தயத்தில் பங்கேற்று மூன்றாம் இடத்தை பிடித்து தமிழகத்திற்கும், இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்த்து வருகிறார் அஜித். இந்நிலையில் இவர் தனக்குள்ள பிரச்சனை குறித்து சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசியுள்ளார்.எனக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது.... நடிகர் அஜித் ஓபன் டாக்! அந்த வகையில், “சமூக வலைதளங்களை சரியாக பயன்படுத்தினால் அது ஒரு சிறந்த கருவியாக இருக்கும். சமூக வலைதளங்களின் மூலமாக தான் நிறைய பேர் மோட்டார் பந்தயங்கள் குறித்து தெரிந்து கொள்கிறார்கள். அதேபோன்று வெளிநாடுகளில் உள்ள மக்கள் இந்திய திரைப்படங்களை பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். என்னுடைய நண்பர்களும் கூட கொரியன் படங்களை பார்த்து அந்த மொழியை கற்றுக் கொள்கிறார்கள். ஆனால் எனக்கு திரைப்படங்களையும், வெப் தொடர்களையும் பார்க்க நேரம் கிடைப்பதில்லை. விமானத்தில் பயணிக்கும் போது மட்டும் தான் எனக்கு தூங்க கூட நேரம் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் எனக்கு தூக்க பிரச்சனை இருக்கிறது. எனக்கு தூங்குவதற்கு சிரமமாக இருக்கும். அப்படியே நான் தூங்கினாலும் 4 மணி நேரம்தான் தூங்குவேன்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ