spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇந்த படத்தை நம்ம கொண்டாடணும்.... 'டூரிஸ்ட் ஃபேமிலி' குறித்து நடிகர் ஆர்யா!

இந்த படத்தை நம்ம கொண்டாடணும்…. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ குறித்து நடிகர் ஆர்யா!

-

- Advertisement -

நடிகர் ஆர்யா டூரிஸ்ட் ஃபேமிலி படம் குறித்து பேசி உள்ளார்.இந்த படத்தை நம்ம கொண்டாடணும்.... 'டூரிஸ்ட் ஃபேமிலி' குறித்து நடிகர் ஆர்யா!

சசிகுமார் நடிப்பில் இன்று (மே 1) திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து மிதுன், கமலேஷ், எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ஷான் ரோல்டன் இதற்கு இசை அமைக்க அரவிந்த் விஸ்வநாதன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை நம்ம கொண்டாடணும்.... 'டூரிஸ்ட் ஃபேமிலி' குறித்து நடிகர் ஆர்யா!குடும்ப பொழுதுபோக்கு படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதாவது இலங்கையில் இருந்து சென்னைக்கு வரும் ஒரு குடும்பம் தங்களுடைய கஷ்டங்களை மறைத்து எப்படி சந்தோஷமாக வாழ்கிறது என்பதை சுவாரஸ்யமான திரைக்கதையின் மூலம் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த். மனிதநேயம் இருந்தால் யாருமே இங்கு அகதிகள் கிடையாது என்பதை எதார்த்தமான திரைக்கதையின் மூலம் அழுத்தமாக சொல்லி இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தை பார்த்து முடித்த நடிகர் ஆர்யா செய்தியாளர்கள் சந்திப்பில் இப்படத்தை பாராட்டி பேசியுள்ளார்.இந்த படத்தை நம்ம கொண்டாடணும்.... 'டூரிஸ்ட் ஃபேமிலி' குறித்து நடிகர் ஆர்யா! அதன்படி அவர், “டூரிஸ்ட் ஃபேமிலி, அபிஷன் ஜீவிந்தின் முதல் படம் என்று யாருமே நம்ப மாட்டார்கள். ஒவ்வொரு காட்சிகளும் அருமையாக இருக்கிறது. இந்த படத்தை பார்க்கும்போது அனைவரும் ரசித்து பார்ப்பீர்கள். கிளைமாக்ஸ் காட்சி அருமையாக இருக்கிறது. அதை பார்க்கும்போது நான், இதைவிட பெரிய ஹீரோயிசம் கிடையாது என்று சசிகுமாரிடம் சொன்னேன். என்ஜாய் பண்ணி பாருங்க. இந்த மாதிரி படங்களை நாம் கொண்டாட வேண்டும்” என்று பாராட்டியுள்ளார்.

MUST READ