Homeசெய்திகள்சினிமாதனுஷின் ஸ்டைலை பின்பற்றும் நடிகர் அதர்வா!

தனுஷின் ஸ்டைலை பின்பற்றும் நடிகர் அதர்வா!

-

- Advertisement -

90 காலகட்டங்களில் பலரின் பேவரைட் நடிகராக திகழ்ந்தவர் நடிகர் முரளி. இவருடைய மூத்த மகன் அதர்வா கடந்த 2009 ஆம் ஆண்டு பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் வெளியான பாணா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனுஷின் ஸ்டைலை பின்பற்றும் நடிகர் அதர்வா!அதைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி திரைப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்றார். அதன் பின்னர் இரும்புக்குதிரை, ஈட்டி, சண்டிவீரன், இமைக்கா நொடிகள் என பல படங்களில் நடித்து பிசியான நடிகராக மாறினார். அடுத்தது டிஎன்ஏ போன்ற பட படங்களை கைவசம் வைத்துள்ளார் அதர்வா. இதற்கிடையில் இவர், இயக்குனர் எம். ராஜேஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகி இருப்பதாக சொல்லப்பட்டது. இருப்பினும் சமீப காலமாக அதர்வாவிற்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. அவர் நடித்து முடித்துள்ள படங்களும் வெளியான பாடில்லை.
இந்நிலையில்தான் நடிகர் அதர்வா குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.தனுஷின் ஸ்டைலை பின்பற்றும் நடிகர் அதர்வா! அதன்படி நடிகர் அதர்வா இயக்குனராக மாறப் போகிறாராம். அதாவது புதிய படம் ஒன்றை தானே இயக்கி நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் நடிகர் அதர்வா, நடிகர் தனுஷின் ஸ்டைலை பின்பற்றுகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இருப்பினும் அதர்வா இயக்கி நடிக்கப் போகும் புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ