சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இன்று (அக்டோபர் 10) உலகம் முழுவதும் வெளியாகிறது. கிட்டத்தட்ட 800க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்படும் இந்த படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் ஐந்து காட்சிகள் திரையிடப்பட இருக்கிறது. எனவே முதல் காட்சி காலை 9 மணி முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஜெய் பீம் படத்தின் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கியிருக்கும் இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கிறது. அனிருத் இதற்கு இசையமைத்திருக்கிறார். நடிகர் ரஜினி இந்த படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார்.
அமிதாப் பச்சன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் பலரும் படையெடுத்து வருகின்றனர். அதே சமயம் தங்களின் கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் தனுஷ் வேட்டையன் திரைப்படத்தை காண கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கிற்கு வருகை தந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
#vettaiyan DAY ! #superstar .. Thalaivar dharisanam
— Dhanush (@dhanushkraja) October 10, 2024
நடிகர் தனுஷ் ஏற்கனவே ரஜினியின் மிக தீவிர ரசிகன். மேலும் நடிகர் தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில், “வேட்டையன் நாள்…. தலைவர் தரிசனம்” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.