- Advertisement -
அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற மலைக்கோட்டை வாலிபன் படத்தில் மோகன்லாலுக்கு பதிலாக வேறு ஒருவர் நடித்திருந்தால் படம் வெற்றி பெற்றிருக்கும் என பிரபல வில்லன் நடிகர் தெரிவித்துள்ளார்.
மலையாள திரை ரசிகர்களாலும், திரை உலகினராலும் லாலேட்டன் என்று கொண்டாடப்படும் நாயகன் மோகன்லால். 0-களில் தொடங்கி இன்று வரை நூற்றுக்கணக்கில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் மோகன்லால் இறுதியாக ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். ரஜினியுடன் இணைந்து அவர் நடித்திருப்பார். அப்படத்தின் மோகன்லாலின் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். படம் மலையாளத்திலும் நல்ல வசூலை பெற்றது. இதைத்தொடர்ந்து, அடுத்தடுத்து பல படங்களில் மோகன்லால் கமிட்டாகி நடித்து வருகிறார்.
