நடிகர் ஜீவா, கலகலப்பு 3 திரைப்படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு சுந்தர். சி இயக்கத்தில் கலகலப்பு எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, சந்தானம், ஓவியா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து ஜீவா, ஜெய் ஆகியோரின் நடிப்பில் கலகலப்பு 2 திரைப்படத்தையும் இயக்கி இருந்தார் சுந்தர்.சி. இந்த படமும் வெற்றி படமாக அமைந்தது. எனவே அடுத்தபடியாக இயக்குனர் சுந்தர். சி, கலகலப்பு 3 திரைப்படத்தை இயக்கப் போவதாக சமீபகாலமாக செய்திகள் வெளியாகி வந்தது.
ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கப்படும்? என்பது குறித்து தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் தான் நடிகர் ஜீவா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கலகலப்பு 3 திரைப்படம் குறித்து பேசி உள்ளார்.
#Jiiva Recent – #SundarC Sir was planning to film #Kalakalappu3 with a small part from the film #MadhaGajaRaja.
– This idea has changed drastically after the release of #MGR.
– Kalakalappu3 is set to launch next year. #MookuthiAmman2 Started 👀
pic.twitter.com/X7Vm705eIm— Movie Tamil (@MovieTamil4) March 11, 2025
அதன்படி அவர் பேசியதாவது, “சுந்தர்.சி சார் மதகஜராஜா படத்தின் ஒரு சிறிய பகுதியை வைத்து கலகலப்பு 3 திரைப்படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் மதகஜராஜா திரைப்படம் வெளியான பிறகு அது அப்படியே மாறிவிட்டது. கலகலப்பு 3 திரைப்படம் அடுத்த ஆண்டுதான் தொடங்க இருக்கிறது. இப்போது சுந்தர்.சி மூக்குத்தி அம்மன் 2 படத்தை தொடங்கியுள்ளார்” என்று அப்டேட் கொடுத்துள்ளார்.
மேலும் கலகலப்பு 3 படத்தில் யார் யார் நடிக்கப் போகிறார்கள்? என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.