Homeசெய்திகள்சினிமா'தக் லைஃப்' படத்தில் நடிக்க மணிரத்னம் என்னை அழைத்தார்.... நடிகர் ஜீவா பேட்டி!

‘தக் லைஃப்’ படத்தில் நடிக்க மணிரத்னம் என்னை அழைத்தார்…. நடிகர் ஜீவா பேட்டி!

-

- Advertisement -

நடிகர் ஜீவா, தக் லைஃப் படத்தில் நடிக்க மணிரத்னம் தன்னை அழைத்ததாக தெரிவித்துள்ளார்.'தக் லைஃப்' படத்தில் நடிக்க மணிரத்னம் என்னை அழைத்தார்.... நடிகர் ஜீவா பேட்டி!நடிகர் ஜீவா தமிழ் சினிமாவில் ராம், ஈ போன்ற பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அந்த வகையில் இவரது நடிப்பில் சமீபத்தில் அகத்தியா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் ஜீவா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் இயக்குனர் மணிரத்னம் குறித்து பேசி உள்ளார். 'தக் லைஃப்' படத்தில் நடிக்க மணிரத்னம் என்னை அழைத்தார்.... நடிகர் ஜீவா பேட்டி!அதன்படி அவர் பேசியதாவது, “மணிரத்னம் சார் என்னை இரண்டு முதல் மூன்று முறை அவருடைய படங்களில் நடிக்க அழைத்தார். ஆனால் அது அமையவில்லை. சமீபத்தில் தக் லைஃப் படத்தில் நடிப்பதற்கும் என்னை அழைத்தார்” என்று தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படம் 2025 ஜூன் 5ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, கௌதம் கார்த்திக், அசோக் செல்வன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசை அமைக்கிறார். ஆக்சன் கலந்த கேங்ஸ்டர் படமாக உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ