நடிகர் கவின் மாஸ்க் படம் குறித்து பேசியுள்ளார்.
நடிகர் கவின் கடைசியாக ஸ்டார் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அடுத்தது இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் ப்ளடி பெக்கர் எனும் திரைப்படம் வருகின்ற தீபாவளி தினத்தை முன்னிட்டு அக்டோபர் 31 இல் வெளியாக தயாராகி வருகிறது. இதற்கிடையில் நடிகர் கவின், மாஸ்க் எனும் திரைப்படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த படத்தில் கவின் உடன் இணைந்து ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தினை விக்ரனன் அசோக் இயக்க இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்து வருகிறார். ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ராஜசேகர் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் கவின் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் மாஸ்க் படம் குறித்து பேசி உள்ளார். “மாஸ்க் படம் டார்க் காமெடிகள் நிறைந்த ஒரு ஆக்சன் திரில்லர் படமாகும். வெற்றிமாறன் சார் தான் இந்த படத்தின் ஸ்கிரிப்டை எனக்கு சொன்னார். அவர் சில முக்கியமான காட்சிகளை பார்க்க மட்டுமே ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவார்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நயன்தாராவுடன் கவின் நடிக்கும் புதிய படம் கிராமத்துக் கதைக்களம் என்பதையும் அந்த படமானது குடும்ப படமாக இருக்கும் எனவும் அப்டேட் கொடுத்துள்ளார்.