Homeசெய்திகள்சினிமாநடிகர் கமல்ஹாசனின் மாமா மறைவு..... கதறி அழும் கமல் மகள்கள்!

நடிகர் கமல்ஹாசனின் மாமா மறைவு….. கதறி அழும் கமல் மகள்கள்!

-

நடிகர் கமல்ஹாசன் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக கமல் நடிப்பில் இந்தியன் 2, கல்கி 2898AD போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. நடிகர் கமல்ஹாசனின் மாமா மறைவு..... கதறி அழும் கமல் மகள்கள்!அதேசமயம் நடிகர் கமல்ஹாசன் மணிரத்னம் இயக்கி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மணிரத்னம், கமல் கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்ட தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி ராஜஸ்தானில் படப்பிடிப்பை முடித்த படக்குழு அடுத்ததாக டெல்லி பறந்துள்ளது. அங்கு படப்பிடிப்பில் கமல்ஹாசன் பங்கேற்க இருக்கிறார் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் மாமா சீனிவாசன் உடல் நலக்குறைவால் காலமானார். கமல்ஹாசனின் மகள்களான ஸ்ருதிஹாசன், அக்சரா ஹாசன் இருவரும் கதறி அழுகின்றனர். அவர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் ஆறுதல் சொல்லி தேற்றுகிறார்.

மேலும் கமல்ஹாசனின் மாமா மறைவிற்கு மக்கள் நீதி மையத்தின்  கட்சித் தொண்டர்களும் திரை பிரபலங்களும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசனின் மாமா மறைவு..... கதறி அழும் கமல் மகள்கள்!தனது மாமாவின் மறைவு குறித்து கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ