- Advertisement -
பிரபல நடிகர் கார்த்தி குடும்பத்துடன் சேர்ந்து சுற்றுலா சென்றிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறியிருக்கும் நடிகர் கார்த்தி. தொடக்கத்தில் காதல் கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து வந்த கார்த்தி அடுத்தடுத்து, ஆக்ஷன், அதிரடி, வரலாற்று பின்னணி கொண்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நாயகனாக உருவெடுத்தார். மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவனாக நடித்து கோலிவுட் ரசிகைகளின் மனதை கொள்ளை கொண்டார் கார்த்தி.
https://x.com/i/status/1800056609152152056
இதைத் தொடர்ந்து கார்த்தி நடிக்கும் 26-வது திரைப்படம் வா வாத்தியாரே. இத்திரைப்படத்தை நலன் குமாரசாமி இயக்குகிறார். அதேபோல, கார்த்தியின் 27 வது படத்தை ’96’படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கி இருக்கிறார். மெய்யழகன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார்.
அடுத்தடுத்து படப்பிடிப்புகளில் பங்கேற்று வரும் நடிகர் கார்த்தி தனது குழந்தைகள் உள்பட குடும்பத்தினருடன் சேர்ந்து சுற்றுலா சென்றிருக்கிறார். டிரெக்கிங் சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது டிரெண்டாகி வருகிறது.