spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிகர் கதிரின் 'மாணவன்' பட கொல்லுராளே பாடல் வெளியானது!

நடிகர் கதிரின் ‘மாணவன்’ பட கொல்லுராளே பாடல் வெளியானது!

-

- Advertisement -

நடிகர் கதிர் நடிக்கும் மாணவன் படத்தின் கொல்லுராளே பாடல் வெளியாகியுள்ளது.

நடிகர் கதிர், விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் வெளியான மதயானைக் கூட்டம் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். நடிகர் கதிரின் 'மாணவன்' பட கொல்லுராளே பாடல் வெளியானது!அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த கதிருக்கு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதைத்தொடர்ந்து அடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் கதிர். அதன்படி தற்போது மாணவன் என்ற புதிய படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் கதிருடன் இணைந்து இயக்குனர் கரு பழனியப்பன், மாஸ்டர் மகேந்திரன், யுவலட்சுமி, அன்பு தாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை SLS ஹென்றி இயக்கியுள்ள நிலையில் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பார்ச்சூன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது படத்தின் கொல்லுறாளே என்னும் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

we-r-hiring

இந்தப் பாடலை பிரதீப் குமார் பாடியிருக்கிறார். சந்துரு பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் கதர் நடிப்பில் உருவாகி வரும் சுழல் 2 என்ற வெப் தொடரும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ