Homeசெய்திகள்சினிமாவதந்திகளை தவிடுபொடியாக்கி சாதித்து காட்டிய கவின்!

வதந்திகளை தவிடுபொடியாக்கி சாதித்து காட்டிய கவின்!

-

நடிகர் கவின் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பயணம் சென்று வந்தவர். அதன்படி தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக கருதப்படுபவர். சின்னத்திரையில் இருக்கும் போதே தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்த கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்தார். வதந்திகளை தவிடுபொடியாக்கி சாதித்து காட்டிய கவின்!பின்னர் லிப்ட், டாடா உள்ளிட்ட படங்களின் மூலம் அனைத்து ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். இவ்வாறு தொடர்ந்து வெற்றி பாதையில் ஓடிக்கொண்டிருக்கும் கவின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதே சமயம் நடிகர் கவின் படப்பிடிப்புக்கு லேட்டாக வருவதாகவும், படப்பிடிப்புக்கு சரியாக ஒத்துழைப்பு தரவில்லை எனவும் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில் அத்தகைய வதந்திகளை எல்லாம் தவிடுபொடியாக்கி ஒரே சமயத்தில் மூன்று படங்களில் நடித்து சாதித்துக் காட்டியிருக்கிறார்.வதந்திகளை தவிடுபொடியாக்கி சாதித்து காட்டிய கவின்!

நடிகர் கவின் டாடா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, தனது 4வது படத்தை நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் ஏறத்தாழ நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் ஒரு பாடல் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. அதே சமயம் இரண்டு நாட்களுக்குள் முழு படப்பிடிப்புகளும் நிறைவடைந்து விடும் என்று சொல்லப்படுகிறது.வதந்திகளை தவிடுபொடியாக்கி சாதித்து காட்டிய கவின்!

அடுத்ததாக ப்யார் பிரேமா காதல் பட இயக்குனர் இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கவின் உடன் இணைந்து திவ்யபாரதி, ஆதிதி பொஹங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி படத்தினை 2024 ஏப்ரல் மாதத்தில் வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.வதந்திகளை தவிடுபொடியாக்கி சாதித்து காட்டிய கவின்!

இதைத் தொடர்ந்து கவின் தனது 6வது திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். பிரபல இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை நெல்சனின் உதவியாளர் சிவபாலன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகளும் முழுவதும் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்தபடியாக இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில், விக்ரமன் அசோகன் இயக்கமுள்ள புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் கவின் நடிப்பில் உருவாகும் படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கவின், பல்வேறு வதந்திகளுக்கு மத்தியில் அடுத்தடுத்த படங்களில் நடித்து முடித்து பதிலடி கொடுத்துள்ளார். அதே சமயம் கவின், படப்பிடிப்புக்கு லேட்டாக வந்தால் இத்தனை படங்களை விரைவில் முடித்திருக்க முடியாது என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ