Homeசெய்திகள்சினிமாஇந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் நடிகர் மாதவனின் புதிய படம்!

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் நடிகர் மாதவனின் புதிய படம்!

-

- Advertisement -
kadalkanni

நடிகர் மாதவன் தமிழில் அறிமுகமாக இருந்தாலும் தற்போது இந்தி மொழியில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக சைத்தான் எனும் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார் மாதவன்.இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் நடிகர் மாதவனின் புதிய படம்! இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அடுத்தது டெஸ்ட், அதிர்ஷ்டசாலி போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அந்த வகையில் இவர் நடித்திருக்கும் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர தயாராகி வருகின்றன.
இந்நிலையில் தான் வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை கோவாவில் நடைபெற இருக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் மாதவனின் புதிய படம் திரையிடப்பட இருக்கிறது. இந்த படத்தினை அஸ்விதார் இயக்கி இருக்கிறார். இது ஹிஸாப் பராபர் எனும் திரைப்படமாகும். இந்த படத்தில் நடிகர் மாதவன் ராதே மோகன் சர்மா எனும் கதாபாத்திரத்தில் ரயில்வே டிக்கெட் கலெக்டராக நடித்திருக்கிறார். இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் நடிகர் மாதவனின் புதிய படம்!தன்னுடைய வங்கிக் கணக்கில் விளக்க முடியாத முரண்பாடு இருப்பதை கண்டுபிடிக்கும் மாதவன் இந்த சிறிய பிரச்சனையை எப்படி மிகப்பெரிய விசாரணை வளையத்திற்குள் கொண்டு செல்கிறார் என்பதுதான் படத்தின் கதை. இந்த படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்குகிறது. எஸ் பி சினி கார்ப் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ