நடிகர் என்பதை எல்லாம் தாண்டி அவருடைய மனிதாபிமானம் அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணம். அதுபடியே வாழ்ந்து வந்தவர் மயில்சாமி.
எல்லோர் இடத்திலும் அன்பு செலுத்தியவர். கடைசி வரைக்கும் சந்தோசமாக சிரித்து கொண்டு தான் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். உடல்நிலை சரி இல்லை என்ற போது தான் அவரிடம் சிறிய கலக்கத்தை நான் பார்த்தேன்.

அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதையே எண்ணமாக வைத்திருந்த நல்ல மனிதனின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்.
காலையில் செய்தியை கேட்டவுடன் என்னால் நம்பவே முடியவில்லை. அவர் வெறும் நடிகர் இல்லை சிறந்த சமூக சேவகர். மத்தவங்களுக்கு உதவி செய்ய பணம் , வசதி தேவையில்லை மனம் இருந்தால் போதும் என்று நினைப்பவர்.

சிவ ! சிவா ! என்று சொல்லி கொண்டு இருந்தவர் மஹா சிவராத்திரி அன்று சிவனடி சேர்ந்து விட்டார்.
திருமுருகன் காந்தி பேட்டி
ஜல்லிக்கட்டு முதல் நாள் போராட்டத்தின் போது இளைஞர்கள் எல்லாம் மெரினாவில் திரண்டு கொண்டிருந்த போது அவர்களை சரியாக வழி நடத்தியது மயில்சாமி தான்.

தலைகணம் இல்லாமல் எளிமையாக அனைவரிடத்திலும் அன்பு செலுத்தி ஜல்லிக்கட்டு போராட்டம் சரியான வழியில் நடக்க துணையாக இருந்தவர்.
மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போதிலும் அச்சம் இன்றி கருத்து தெரிவித்தார்.
ஜெயக்குமார் பேட்டி
எல்லோரையும் சிரிக்க வைத்து, எல்லோருடைய அன்பையும் சம்பாதித்தவர். சிறந்த நட்புக்கு எடுத்துக்காட்டாகவும், பழகுவதற்கு பாசமானவர். இன்று மயில்சாமி நம்முடன் இல்லை என்பது துயரச் செய்தி.
எம்ஜிஆர் ஜெயலலிதா மீதும் பற்றும் பாசமும் கொண்டவர். அவர்களது புகழை எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார்.

நாடி வருபவர்களுக்கு எந்த வகையிலாவது உதவி செய்வார். ஒருவர் வயிறு பசியோடு இருக்க கூடாது என எம்ஜிஆர் நினைத்ததை போல, எம்ஜிஆர் மீது பற்று கொண்ட மயில்சாமாயும் அப்படியே நினைப்பார்.
இவருடைய இறப்பு துரதிர்ஷ்டவசமானது. நல்ல மனிதரை திரையுலகம் இழந்துள்ளது



