- Advertisement -
புற்றுநோயுடன் போராடி வந்த பழம்பெரும் நடிகர் ஜூனியர் மெஹமூத் மும்பையில் காலமானார். அவருக்கு வயது 67. இவர் பழம்பெரும் இந்தி நடிகர் மெஹமூத் அலியின் மகன் ஆவார். இவரின் இயற்பெயர் நயீம் சயீத். சினிமா ரசிகர்கள் இவரை ‘ஜூனியர் மெஹமூத்’ என்று தந்தையின் பெயரிலேயே அழைத்தனர். கடந்த 1967-ம் ஆண்டு வெளியான நவுனிகல் என்ற இந்தி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு அறிமுகமானவர் மெஹமூத்.

இதுவரை 260-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். இதில், 6 மராத்தி மொழி திரைப்படங்களை தயாரித்து இயக்கியும் இருக்கிறார். கட்டி படாங், மேரா நாம் ஜோக்கர், பரவரிஷ், தோ ஆவூர் தோ பாஞ்ச் உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ள மெஹமூத் இந்தி, மராத்தி, பஞ்சாபி உட்பட 7 மொழி படங்களில் நடித்து பிரபலமடைந்து உள்ளார்.




