Homeசெய்திகள்சினிமாபாட்ஷாவாக மாறும் நடிகர் நானி.... 'சூர்யாவின் சனிக்கிழமை' படம் குறித்து எஸ்.ஜே. சூர்யா பேச்சு!

பாட்ஷாவாக மாறும் நடிகர் நானி…. ‘சூர்யாவின் சனிக்கிழமை’ படம் குறித்து எஸ்.ஜே. சூர்யா பேச்சு!

-

சூர்யாவின் சனிக்கிழமை படம் குறித்து எஸ் ஜே சூர்யா பேசியுள்ளார்.பாட்ஷாவாக மாறும் நடிகர் நானி.... 'சூர்யாவின் சனிக்கிழமை' படம் குறித்து எஸ்.ஜே. சூர்யா பேச்சு!

நடிகர் நானி தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் தமிழில் வெப்பம், நான் ஈ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். இவரது நடிப்பில் கடைசியாக ஹாய் நான்னா எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து இவர் தெலுங்கில் சரிபோதா சனிவாரம் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பாட்ஷாவாக மாறும் நடிகர் நானி.... 'சூர்யாவின் சனிக்கிழமை' படம் குறித்து எஸ்.ஜே. சூர்யா பேச்சு!தமிழில் இந்த படத்திற்கு சூர்யாவின் சனிக்கிழமை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்குகிறார். இந்த படத்தில் நானியுடன் இணைந்து பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். எஸ் ஜே சூர்யாவும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டி வி வி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜேக்ஸ் பிஜாய் படத்திற்கு இசையமைக்கிறார். ஜி முரளி இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 29ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. எனவே படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அந்தப் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எஸ்.ஜே சூர்யா படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். பாட்ஷாவாக மாறும் நடிகர் நானி.... 'சூர்யாவின் சனிக்கிழமை' படம் குறித்து எஸ்.ஜே. சூர்யா பேச்சு!அதன்படி அவர் பேசியதாவது, “ரஜினியின் பாட்ஷா படத்தின் ஃபார்முலாவை தான் விவேக் ஆத்ரேயா கையில் எடுத்திருக்கிறார். ஞாயிற்றுக்கிழமையிலிருந்து வெள்ளிக்கிழமை வரை மாணிக்கமாக இருக்கும் நடிகர் நானி சனிக்கிழமை மட்டும் பாட்ஷாவாக மாறிவிடுகிறார். அது போன்ற கதை தான் சூர்யாவின் சனிக்கிழமை படம்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ