Homeசெய்திகள்சினிமாமணமகன் ஆகும் பாகுபலி.... பிரபாஸ் வீட்டில் டும்.. டும்.. சத்தம்?

மணமகன் ஆகும் பாகுபலி…. பிரபாஸ் வீட்டில் டும்.. டும்.. சத்தம்?

-

- Advertisement -

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் பான் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். இவர் தற்போது தி ராஜாசாப், கண்ணப்பா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். மணமகன் ஆகும் பாகுபலி.... பிரபாஸ் வீட்டில் டும்.. டும்.. சத்தம்?மேலும் சலார் 2, ஸ்பிரிட் போன்ற படங்களிலும் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார் பிரபாஸ். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் தெலுங்கு சினிமாவில் முரட்டு சிங்கிளாக வலம் வரும் இவருக்கு எப்போது திருமணம் நடக்கப்போகிறது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே அனுஷ்காவும், பிரபாஸும் காதலித்து வருகிறார்கள் என தகவல் வெளியானது. மணமகன் ஆகும் பாகுபலி.... பிரபாஸ் வீட்டில் டும்.. டும்.. சத்தம்?பின்னர் இருவரும் நண்பர்களாக தான் பழகி வருகிறோம் என தெரிவித்தனர். இதற்கிடையில் திருமணம் என்றாலே பிரபாஸ் பயப்படுகிறார் என்றும் பிரபாஸின் நெருங்கிய நண்பர் ஒருவர் திருமணத்திற்கு பிறகு நிம்மதி இல்லாத வாழ்க்கை வாழ்வதால் திருமணத்தின் மீதான ஆர்வமே பிரபாஸுக்கு இல்லை என அவருடைய அம்மா சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் பிரபாஸ் திருமண பந்தத்தில் இணைய உள்ளார் என புதிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல் வெளிவந்ததுமே மணமகள் யாராக இருக்கும்? என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் உலா வரத் தொடங்கிவிட்டது. மணமகன் ஆகும் பாகுபலி.... பிரபாஸ் வீட்டில் டும்.. டும்.. சத்தம்?அதாவது தெலுங்கானாவில் பிரபல தொழிலதிபரின் மகளை பிரபாஸ் திருமணம் செய்ய இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் பிரபாஸின் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ