- Advertisement -
ப்ளூ ஸ்டார் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தில் நடித்த பாண்டியராஜனின் மகன் பிருத்வியின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோலிவுட்டில் வளர்ந்து இரண்டு கதாநாயகர்கள் சாந்தனு மற்றும் அசோக் செல்வன். திரைக்கு அறிமுகமாகி மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளில் நடித்து வருகின்றனர். வழக்கமாக கமர்ஷியல் திரைப்படங்களாக இல்லாமல், முற்றிலும் மாறுபட்ட வேடங்களையும், திரைக்கதைகளையும் இருவரும் தேர்வு செய்து நடித்து வருகின்றனர். சாந்தனு நடிப்பில் இறுதியாக ராவண கோட்டம் திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. அசோக் செல்வன் நடிப்பில் சபாநாயகன் திரைப்படம் இறுதியாக வெளியானது.


இந்நிலையில், சாந்தனு, அசோக் செல்வன் மற்றும் பாண்டியராஜன் மகன் பிருத்வி ஆகிய மூவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் ப்ளூ ஸ்டார். இத்திரைப்படத்தை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கி உள்ளார். மேலும், பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்து உள்ளது. கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட்டில் நடக்கும் அரசியலை மையப்படுத்தி விறுவிறு கதைக்களத்துடன் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் கடந்த 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது.



