spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரஜினி பட இசையமைப்பாளர் மறைவு... சோகத்தில் திரையுலகம்...

ரஜினி பட இசையமைப்பாளர் மறைவு… சோகத்தில் திரையுலகம்…

-

- Advertisement -
பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆனந்த், உடல்நலக்குறைவால் காலமானார். இச்செய்தி, திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகில் அன்று முதல் இன்று வரை நூற்றுக்கணக்கில் இசையமைப்பாளர்கள் உள்ளனர். அவற்றில் வெகு சிலர் மட்டுமே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர். 80-களிலும், 90-களிலும் இசையமைப்பாளர்களின் ஆதிக்கம் குறைவாக இருந்தபோது, தென்றல் போன்ற பாடல்களால் மக்கள் மனதில் இடம் பிடித்த முக்கிய இசை அமைப்பாளர்களில் ஒருவர் விஜய் ஆனந்த். இவர், ரஜினிகாந்த் நடித்த நான் அடிமை இல்லை, நாணயம் இல்லாத நாணயம், காவலன் அவன் கோவலன், ராசாத்தி வரும் நாள், கயிறு உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில், விஜய் ஆனந்த் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71 ஆகும். ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான் உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை அவர் கொடுத்துள்ளார். விசு இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு இவர்தான் இசை அமைத்திருக்கிறார். இவரது இறப்பு பலருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரை நட்சத்திரங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

MUST READ