Homeசெய்திகள்சினிமாஆணவக்கொலை குறித்து நடிகர் ரஞ்சித்தின் சர்ச்சை பேச்சு!

ஆணவக்கொலை குறித்து நடிகர் ரஞ்சித்தின் சர்ச்சை பேச்சு!

-

நடிகர் ரஞ்சித் கடந்த 1990 காலகட்டங்களில் இருந்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அந்த வகையில் இவர் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்திருக்கிறார். ஆணவக்கொலை குறித்து நடிகர் ரஞ்சித்தின் சர்ச்சை பேச்சு!மேலும் தொலைக்காட்சி தொடரிலும் நடிக்கிறார். இந்நிலையில் இவரது இயக்கத்திலும் நடிப்பிலும் உருவாகி இருக்கும் கவுண்டம்பாளையம் எனும் திரைப்படம் நேற்று (ஆகஸ்ட் 9ம் தேதி) வெளியானது. இந்தப் படத்தை நடிகர் ரஞ்சித் ரசிகர்களுடன் சேலம் மாவட்டம் கருப்பூரில் இருக்கும் பிரபல திரையரங்கு ஒன்றில் கண்டுகளித்துள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஞ்சித் ஆணவக் கொலை குறித்து பேசினார். அதற்கு பதில் அளித்த ரஞ்சித், “ஆணவக் கொலை என்பது எமோஷன். கவுண்டம்பாளையம் படத்தில் ஆணவக் கொலைக்கு தீர்வாக தான் சொல்லி இருக்கிறேன். பெற்றோர்களுக்கு தான் அதன் வேதனை தெரியும். அதாவது ஆணவக்கொலை என்பது வன்முறை கிடையாது. பெற்றோர்கள் பிள்ளைகளின் மீதுள்ள அக்கறை தான்” என்று கூறினார்.ஆணவக்கொலை குறித்து நடிகர் ரஞ்சித்தின் சர்ச்சை பேச்சு!

ஏற்கனவே சமூகத்தில் சாதி ஆணவக் கொலை இன்றளவும் தொடர்ந்து வருகிறது. அதனை தடுக்க தனி சட்டம் கொண்டு வர பல்வேறு தரப்பினர் இடையே கோரிக்கைகளும் எழுந்து வரும் நிலையில் பா ரஞ்சித் தற்போது ஆணவக் கொலை குறித்து பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ