நடிகர் சந்தானம் மன்னவன் வந்தானடி படம் குறித்து பேசி உள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒரு நகைச்சுவை நடிகராக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சந்தானம். இவர் அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் நாளை (மே 16) திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த படம் ஹாரர் கலந்த காமெடி கதைக்களத்தில் உருவாகி இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. இது தவிர சந்தானம், சிம்புவுடன் இணைந்து STR 49 படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் சந்தானம் சமீபத்தில் நடந்த பேட்டியில் செல்வராகவன் இயக்கத்தில் தான் நடித்த மன்னவன் வந்தானடி படம் குறித்து பேசி உள்ளார்.
“#MannavanVanthanadi film was the perfect mix of #Selvaraghavan & my combo🫰. It’s a complete love story mixed with my comedy elements😀♥️. 80% of the film is completed & came out very well👌. But currently on hold due to production issue🙁”
– Santhanampic.twitter.com/nlVmQqCg7x— AmuthaBharathi (@CinemaWithAB) May 15, 2025
அதன்படி அவர், “மன்னவன் வந்தானடி திரைப்படம் நல்ல கதை. நல்ல படம் அது. அது முழுக்க முழுக்க லவ் ஸ்டோரி. அதில் என்னுடைய காமெடிகள் கலந்திருக்கும். அந்த படம் கிட்டத்தட்ட 80 சதவீதம் முடிவடைந்து விட்டது. நன்றாக வந்தது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் இருந்த பிரச்சனைகளால் அந்த படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மன்னவன் வந்தானடி திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அதிதி பொஹங்கர் நடித்திருந்தார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.