- Advertisement -
எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் தமிழில் பிரபலம் அடைந்த ஷர்வானந்திற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அவரே சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
டோலிவுட் திரையுலகில் இளம் ஹீரோவாக வலம் வரும் ஷர்வானந்த், கடந்த ஆண்டு, ஜூன் மாதம் ரக்ஷிதா ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள லீலா அரண்மனையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இரு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்று முடிந்தது. சுமார் 3 நாட்கள் நடைபெற்ற இந்த திருமண விழாவில் ராம்சரண் உள்ளிட்ட ஏராளமான தெலுங்கு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
