நடிகர் சிம்பு தற்போது கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அடுத்தது இவர், ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்து சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. மேலும் படப்பிடிப்பு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சிம்பு, லப்பர் பந்து படக்குழுவை நேரில் சந்தித்து பாராட்டி உள்ளார்.
ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோரின் நடிப்பில் உருவாகி இருந்த லப்பர் பந்து திரைப்படம் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி திரைக்கு வந்தது. இந்த படத்தை தமிழரசன் பச்சமுத்து இயக்க பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். கிரிக்கெட்டில் ஈகோ கிளாஸ் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
This happened today…With my dear @SilambarasanTR_ .Thanks for the love & your kind words na #STR Love you ❤️🤗#LubberPandhu @tamizh018 @isanjkayy @Prince_Pictures pic.twitter.com/KoOcQujzfB
— Harish Kalyan (@iamharishkalyan) October 25, 2024
மேலும் பல்வேறு தரப்பினரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிம்புவும், ஹரிஷ் கல்யாண், தமிழரசன் பச்சமுத்து உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அடுத்தது ஹரிஷ் கல்யாண், தனது சமூக வலைதள பக்கத்தில் சிம்புவிற்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றிணையும் வெளியிட்டு சிம்புவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.