நடிகர் சிம்பு தற்போது தக் லைஃப் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். கமல் – மணிரத்னம் கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதற்கான ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் சிம்பு, STR 49, STR 50, STR 51 ஆகிய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதில் STR 49 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் கடந்த பல மாதங்களுக்கு முன்னதாகவே STR 48 படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் ஒரு சில காரணங்களால் அந்த படம் தாமதமாக, STR 50 ஆக மாறியது.
அது மட்டும் இல்லாமல் இந்த படத்தை நடிகர் சிம்புவே தயாரிக்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்திலேயே இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் போதே, இப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் பீரியாடிக் படமாக எடுக்கப்படுகிறது என்றும், இதன் நடிகர் சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்கப் போகிறார் என்றும், அதில் ஒரு வேடம் திருநங்கை வேடம் என்றும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. தற்போது இதுகுறித்து சமீபத்தில் கடந்த பேட்டியில் சிம்புவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முதலில் கமல்ஹாசன், “தக் லைஃப் படத்திற்கு சிம்பு தேவை என்பதால் தான் நாங்கள் STR 50 படத்தை தியாகம் செய்துவிட்டோம். தற்போது அந்த படத்தை சிம்புவே தயாரிக்கிறார்” என்று கூறினார்.
About #STR50 (Desingh Periyasamy Film)#KamalHaasan: We need STR for Thuglife, that’s why we sacrificed STR50. But now Simbu itself producing it🤝#SilambarasanTR: As I’m producing it, I can do whatever I think. I’m doing feminine role for one character🌟pic.twitter.com/1vwkS01Vma
— AmuthaBharathi (@CinemaWithAB) May 22, 2025
அதைத்தொடர்ந்து பேசிய சிம்பு, “அந்த படத்தை நான்தான் தயாரிக்கிறேன். ஆமாம் பெண்மை உணர்வுள்ள ஒரு வேடம் அந்த படத்தில் இருக்கிறது. அதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள கமல் சாரிடம் பேசினோம். ஒரு நடிகருக்கு இது போன்ற வித்தியாசமான ஒன்று கிடைத்தால் தான் அவரால் அவருடைய திறமையை காட்ட முடியும்” என்று தெரிவித்துள்ளார்.