நடிகர் சூரி வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் பரோட்டா சூரி என்று அனைவராலும் சொல்லப்பட்டவர். இப்படி ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக இருந்த இவர் தற்போது ஹீரோவாக உருவெடுத்துள்ளார். அதாவது கடந்தாண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் தான் நடிகர் சூரி ஹீரோவாக களமிறங்கினார். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த சூரி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்றார். இந்த படம் இவருக்கு வெற்றி படமாக அமைய அடுத்ததாக தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். விடுதலை படத்தைத் தொடர்ந்து கடந்த மே மாதம் கருடன் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சூரி ஆக்சன் ஹீரோவாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இந்த படமும் ஏகபோக வெற்றி பெற்றது. இந்நிலையில் அடுத்ததாக சூரி நடிப்பில் கொட்டுக்காளி எனும் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 23 அன்று வெளியாக இருக்கிறது. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். கூழாங்கல் பட இயக்குனர் பிஎஸ் வினோத் ராஜ் படத்தை இயக்கியுள்ளார். இதில் சூரியுடன் இணைந்து அன்னா பென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
“Don’t come in the same mindset of Viduthalai/Garudan for #Kottukkaali also. But you will like this film very much🔥. I hope you will take 15mins to enter into the world of Kottukkaali🤝”
– Soori pic.twitter.com/21LUgJInSi— AmuthaBharathi (@CinemaWithAB) August 11, 2024
இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகளும் ப்ரமோஷன் பணிகளும் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நடிகர் சூரி, கொட்டுக்காளி படம் குறித்து பேசியுள்ளார். விடுதலை, கருடன் உள்ளிட்ட படங்களின் மைண்ட் செட்டில் வராதீங்க. கொட்டுக்காளி படம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்று நம்புகிறேன். கொட்டுக்காளி உலகத்திற்குள் செல்ல நீங்கள் 10 நிமிடங்கள் எடுத்துக் கொள்வீர்கள். கண்டிப்பாக மக்கள் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த படம் நிச்சயம் புது அனுபவத்தை தரும்” என்று பேசியுள்ளார்.