spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவெள்ள நிவாரணத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கிய நடிகர் சூரி

வெள்ள நிவாரணத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கிய நடிகர் சூரி

-

- Advertisement -
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் பல முன்னணி திரைப்பிரபலங்கள் படங்களில் நகைச்சுவை வேடத்திலும், முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து உள்ளார். சூரி முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் விடுதலை. வெற்றிமாறன் இப்படத்தை இயக்குகிறார். படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் பாகம் வெற்றி அடைந்ததை அடுத்து இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இரண்டாம் பாகத்திலும் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் மஞ்சு வாரியாரும் படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சிறுமலையில் நடைபெற்று வருகிறது. மேலும், நடிகர் சூரி மதுரையில் அம்மன் என்ற பெயரில் உணவகத்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், நடிகர் சூரி முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் நிதி கொடுத்துள்ளார். இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் மிக்சாங் புயல் கனமழை நிவாரண பணிகளுக்கு துணை நிற்கும் வகையில், பலர் சமூக அக்கறையுடன் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அதன்படி, திரைப்பட நடிகர் சூரி மற்றும் மதுரை அம்மன் உணவகம் சார்பில் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி இருக்கிறார் என பதிவிட்டிருந்தார்.

MUST READ