நடிகர் சூரி, கடந்த 2009 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் நடித்ததன் மூலம் பரோட்டா சூரியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அடுத்தது இவர் குள்ளநரி கூட்டம், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், தேசிங்கு ராஜா என பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவ்வாறு காமெடி நடிகராக தனது திரை பயணத்தை தொடங்கிய சூரி, கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகத்தின் மூலம் ஹீரோவாக உருவெடுத்தார்.
அதைத்தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாகவும் முன்னணி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் சூரி. அதன்படி கொட்டுக்காளி, ஏழு கடல் ஏழு மலை போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் விடுதலை இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். இதனிடையில் கடந்த மே மாதம் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடித்து வெளியான கருடன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இந்த படத்தில் சூரி முதன்முறையாக ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்கி இருந்தார். அந்த வகையில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் சூரி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரத்திற்கு சென்றுள்ளார். அங்கு சூரி, கூலிங் கிளாஸ் அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- Advertisement -