spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரைவேட் ஜெட் விமானம் வாங்கிய நடிகர் சூர்யா!

பிரைவேட் ஜெட் விமானம் வாங்கிய நடிகர் சூர்யா!

-

- Advertisement -

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். நடிப்பின் நாயகன் என்று சொல்லப்படும் சூர்யா தனது அசாத்தியமான நடிப்பினால் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். பிரைவேட் ஜெட் விமானம் வாங்கிய நடிகர் சூர்யா!கடைசியாக நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அதை தொடர்ந்து தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற அக்டோபர் 10 அன்று வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் சூர்யா தனது 44 வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டான நிலையில் சூர்யா 44 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு அந்தமான், ஊட்டி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் சூர்யா பிரைவேட் ஜெட் விமானம் ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.பிரைவேட் ஜெட் விமானம் வாங்கிய நடிகர் சூர்யா!

திரை பிரபலங்கள் பலரும் தங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக தனி விமானங்கள் வாங்கி தங்களின் வசதிக்கேற்ப அதை பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே மகேஷ் பாபு, சிரஞ்சீவி, ராம்சரண், அல்லு அர்ஜுன், நயன்தாரா போன்றோர் சொந்தமாக தனி விமானங்கள் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் நடிகர் சூர்யாவும் தற்போது இணைந்துள்ளார். அதன்படி டசால்ட் ஃபால்கன் 2000 என்ற பிரைவேட் ஜெட் விமானத்தை வாங்கியிருக்கிறார் சூர்யா. இந்த விமானத்தின் மதிப்பு ரூ. 120 கோடி என்று சொல்லப்படுகிறது. நடிகர் சூர்யா தான் தமிழ் சினிமாவிலேயே அதிக விலையில் தனி விமானம் வைத்திருப்பவர் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ