spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிபத்தில் உயிரிழந்த தீவிர ரசிகர்... நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா...

விபத்தில் உயிரிழந்த தீவிர ரசிகர்… நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா…

-

- Advertisement -
விபத்தில் இறந்துபோன தனது ரசிகரின் வீட்டிற்கு நேரில் சென்று நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்தினார்.

கோலிவுட்டின் தவிர்க்க முடியாத தனிப்பெரும் நாயகன் நடிகர் சூர்யா. இறுதியாக கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் நடிகர் சூர்யா. இதைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி, சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தி நடிகர் பாபி தியோல் வில்லனாக நடிக்கிறார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரதாத் இசை அமைக்கிறார்.

we-r-hiring
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் சூர்யா படப்பிடிப்பை நிறைவு செய்ததாக அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து படத்தின் பின்னணி வேலைகளும் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, விழுப்புரம் மாவட்டம் சூர்யா ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் மணிகண்டன் என்பவர் விபத்தில் உயிரிழந்தார். பேருந்து நிலையம் எதிரே சில நாட்களுக்கு முன்பாக நடந்த சாலை விபத்தில் சிக்கி மணிகண்டன் இறந்தார். இதற்காக நடிகர் சூர்யா அவரது இல்லத்திற்கு சென்று அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்து, நிதியுதவியும் வழங்கினார்.

நடிகர் சூர்யா நடிப்பு மட்டுமன்றி அகரம் பவுண்டேசன் மூலமாக, ஏழை எளிய குழந்தைகளின் படிப்பிற்கும் உதவி வருகிறார் நடிகர் சூர்யா. அதேபோல, அவரது தம்பியும், நடிகருமான கார்த்தியும், உழவன் பவுண்டேசன் மூலம் தன்னார்வலர்களுக்கும், விவசாயிகளுக்கும், வேளாண் ஆர்வலர்களுக்கும் உதவி வருகிறார்.

MUST READ