இந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொள்ளவில்லை. கொலை செய்யப்பட்டதாக பிரேதபரிசோதனையில் தகவல்.
இந்திப்பட உலகில் வளர்ந்து வந்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் நடித்த எம். எஸ். தோனி திரைப்படம் இந்தியா முழுவதும் மிகுந்த வரவேற்பினைப் பெற்ற திரைப்படம். இந்திய கிரிக்கெட் வீரர் “முன்னாள் கேப்டன் எம். எஸ். தோனியின்“ வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். அந்த படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிரேத பரிசோதனையிலும் அவர் கொலை செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது.
ஆனாலும் சுஷாந்த் சிங் மரணத்தில் தொடர்ந்து சர்ச்சை எழுந்து கொண்டே இருந்தது. இதற்கிடையே மும்பை போலீசார் சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணையை நடத்தினர்.
அதில் போதை மருந்து பிரச்சினையும் கலந்திருந்ததால் வழக்கை அமலாக்கத்துறை மற்றும் நார்கோ டிக்ஸ் தடுப்பு பிரிவு, சிபிஐ ஆகியவற்றிடம் ஒப்படைக்கப்பட்டது.
நடிகர் சுஷாந்தின் தோழியும் நடிகையுமான ரியா சக்ரவர்த்தி சுஷாந்திற்கு போதை பொருளை சப்ளை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலையானார்.
இந்த நிலையில் சுஷாந்த் தற்கொலை செய்து கொள்ளவில்லை. கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பிரேத பரிசோதனை செய்த ரூப்குமார் என்பவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங் இறந்த போது 5 உடல்கள் பிரேத பரிசோதனைக் காக மும்பை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன. அதில் ஒரு சடலம் விஐபியின் சடலம் என தெரிவித்தனர்.
“நான் பிரேத பரிசோதனை கூடத்திற்கு சென்றபோதுதான் சுஷாந்த் சிங் என தெரியவந்தது. அவரது கழுத்தில் இரண்டு அல்லது மூன்று இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், உடற்கூராய்வு செய்வதை வீடியோ பதிவுதான் செய்யப்பட வேண்டும். ஆனால் எனது உயரதிகாரிகள் புகைப் படங்களை மட்டுமே எடுக்க சொன்னார்கள். அதனால் நானும் அப்படியே செய்தேன்“ என்று அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.
“நடிகர் சுஷாந்தின் உடலை பார்த்த போது இது தற்கொலை அல்ல, கொலை தான் என்று நான் எனது சீனியர்களிடம் கூறினேன் ஆனால் அதை அவர்கள் கண்டு கொள்ளாமல் போட்டோ எடுக்கும் வேலையை மட்டும் பார்க்கவும்“ என்று கூறியதாக அவர் கூறினர்.
இதையடுத்து “பிரேத பரிசோதனை செய்து உடலை போலீஸாரிடம் இரவு நேரத்தில் ஒப்படைத்ததாகவும், அந்த நேரத்தில் பிரேத பரிசோதனை நடத்த மாட்டோம். ஆனால் அன்று அவசர அவசரமாக சுஷாந்தின் பிரேத பரிசோதனை நடத்தியதாக“ கூறியிருக்கிறார்.
இது பாலிவுட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.