Homeசெய்திகள்சினிமாநடிகை தமன்னாவுக்கு சம்மன்... மும்பை சைபர் கிரைம் நடவடிக்கை...

நடிகை தமன்னாவுக்கு சம்மன்… மும்பை சைபர் கிரைம் நடவடிக்கை…

-

தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை தமன்னா. இவர் 2005-ம் ஆண்டு வெளிவந்த சந்த் ச ரோஷன் செஹ்ரா என்ற படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார். அடுத்து, தமிழில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை தமன்னா. இவர் 2005-ம் ஆண்டு வெளிவந்த சந்த் ச ரோஷன் செஹ்ரா என்ற படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார். அடுத்து, தமிழில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை தமன்னா.

கல்லூரி திரைப்படம் தமன்னாவில் திரை வாழ்வில் மைல்கல்லாக அமைந்தது. அதைத் தொடர்ந்து, படிக்காதவன், பையா, கண்டேன் காதலை, தில்லாலங்கடி, சிறுத்தை, வீரம், தோழா, தர்மதுரை, தேவி, சுறா என பல படங்களில் நடித்திருக்கிறார். விஜய், ஜெயம்ரவி, கார்த்தி, விஜய் சேதுபதி, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் அவர் இணைந்து நடித்துள்ளார். அவரது நடிப்பில்தமிழில் இறுதியாக ஜெயிலர் திரைப்படம் வெளியானது. தமிழ் மட்டுமன்றி தற்போது பாலிவுட்டிலும் அவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவையும் அவர் காதலித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை தமன்னா கடந்த 2023-ம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகளை ஃபேர்பிளே என்ற செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட விவகாரத்தில், நடிகை தமன்னாவுக்கு சைபர் கிரைம் சம்மன் அனுப்பி உள்ளது. அதில், நடிகை தமன்னா நேரில் விசாரணை ஆஜராகும்படி மும்பை கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி இருக்கிறது. இந்த ஃபேர்பிளே என்ற செயலியின் விளம்பரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ