- Advertisement -
நடிகர் பிரசாந்தை வில்லனாக நடிக்க விட மாட்டேன் என்று அவரது தந்தையும், நடிகருமான தியாகராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கோலிவுட் திரையுலகில் ரசிகைகளின் மனம் கவர்ந்த நாயகனாக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். 1990-ம் ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்தின் மூலம் அவர் நாயகனாக அறிமுகமானார். இவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து வண்ண பூக்கள், செம்பருத்தி, உனக்காக பிறந்தேன், கிழக்கே வரும் பாட்டு, ராசா மகன், கண்மணி உள்பட பல காதல் திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட நடிகர்கள் வெற்றிக்காக போராடிகக் கொண்டிருந்த நேரத்தில், அடுத்தடுத்த படங்களின் மூலம் வெற்றியை கொடுத்துக் கொண்டிருந்தார்.
