தளபதி என்று தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் விஜய். இவர் தற்போது அரசியல்வாதியாகவும் உருவெடுத்துள்ளார். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் விஜய். விஜயின் அரசியல் வருகைக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் விஜய் தற்போது தனது 68வது படமான கோட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் 2024 செப்டம்பர் 5இல் வெளியாக இருக்கிறது. அதை தொடர்ந்து தளபதி 69 படம் தான் தனது கடைசி படம் என ஏற்கனவே விஜய் தெரிவித்தபடி விஜயின் 69 ஆவது படம் தொடர்பான வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. தளபதி 69 படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் முழு நேர அரசியல்வாதியாக மாற இருக்கிறார். இந்நிலையில் விஜய் த.வெ.க கட்சியின் சமூக வலைதள பக்கத்தில் இன்று பக்ரீத் கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை ஆகிய நற்குணங்களை எடுத்துரைக்கும் வகையில் உலகெங்கும் உள்ள இசுலாமிய சகோதர சகோதரிகளால் பக்ரீத் பண்டிகை, தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் இசுலாமிய சொந்தங்கள் அனைவருக்கும் என் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகளைத்…
— TVK Vijay (@tvkvijayhq) June 17, 2024
அந்த பதிவில், “அன்பு தியாகம் அர்ப்பணிப்பு ஒற்றுமை ஆகிய நற்குணங்களை எடுத்துரைக்கும் வகையில் உலகமெங்கும் இருக்கும் இஸ்லாமியர்களால் பக்ரீத் பண்டிகை தியாகத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் எனது இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார் விஜய்.