Homeசெய்திகள்சினிமாரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய்.... விசில் சத்தம் பறந்தது...

ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய்…. விசில் சத்தம் பறந்தது…

-

- Advertisement -

நடிகர் விஜய் நான்கு மாவட்டத்தை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட மன்ற நிர்வாகிகளை சந்தித்தார்.

சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் நடிகர் விஜய் நான்கு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார்.

https://youtu.be/chX3h_xH_uw

செங்கல்பட்டு, கடலூர்,அரியலூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த சுமார் 300 நிர்வாகிகளை சந்தித்தார்.

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய் கடந்த 20 ஆம் தேதி சேலம்,நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அதனை தொடர்ந்து மீண்டும் இன்று ரசிகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இரண்டு மணி நேரம் தனது ரசிகர்களிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த நடக்க முடியாத மாற்று திறனாளி ரசிகர் பிரபாகரனை தனது கைகளில் ஏந்தியப்படி எடுத்துக் கொண்டார்.

MUST READ