சாதாரண துணை நடிகராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக மாறி இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்ததன் மூலம் இந்திய அளவில் பேசப்படும் நடிகராகவும் மாறிவிட்டார். தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஜய் சேதுபதி அதன் பின்னர் பீட்சா, சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற பல தொடர் வெற்றிப் படங்களை கொடுத்தார். அதேசமயம் தன்னுடைய நட்பு வட்டாரங்களுக்காக பல திரைப்படங்களில் கேமியோ ரோலிலும் நடித்திருந்தார். சினிமாவில் ஹீரோவாக நடித்தால் மட்டுமே வளர்ச்சி அடைய முடியும் என்ற பிம்பத்தை உடைத்து வில்லனாகவும் ஒரு ரவுண்டு வந்தார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் ஆகியோருக்கும் வில்லனாக நடித்து மாஸ் காட்டினார். அதைத் தொடர்ந்து ஹிந்தியில் ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் படத்தில் நடித்திருந்தார். பல இந்தி மொழி வெப் சீரிஸ் மற்றும் மெரி கிறிஸ்மஸ் உள்ளிட்ட படங்களிலும் நாயகனாகவும் நடித்துள்ளார். இவ்வாறாக நாளுக்கு நாள் தன்னை அடுத்த களத்திற்கு கொண்டு செல்லும் விஜய் சேதுபதி மேலும் ஒரு லெவலுக்கு செல்லும்படியாகத்தான் அவருடைய அடுத்த லைன் அப் படங்கள் உள்ளன.
குரங்கு பொம்மை படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாக மகாராஜா திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாக வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் இந்த படம் ரிலீசாக உள்ளது. வழக்கமாகவே நடிப்பில் மிரட்டும் விஜய் சேதுபதி இந்த படத்தில் வித்தியாசமான கதா பாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் நிச்சயம் இப்படத்தில் அவருடைய நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை படத்தில் வாத்தியாராக நடித்து பாராட்டை பெற்றிருந்தார் விஜய் சேதுபதி. முதல் பாகத்தில் இவர் தொடர்பான காட்சிகள் குறைவாக இருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில், கதை முழுக்க முழுக்க விஜய் சேதுபதியை சுற்றி தான் நடக்கும் என்று கூறப்படுகிறது. இப்படமும் நிச்சயம் விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தர உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இதற்கிடையில் கிஷோர் பாண்டுரங்க இயக்கத்தில் காந்தி டாக்ஸ் என்னும் படத்திலும் நடிக்கிறார் விஜய் சேதுபதி.
மேலும் இவருடைய 51வது படத்தை ஆறுமுககுமார் இயக்குகியுள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் விரைவில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இந்த படத்துக்கு சத்தியமா பொய் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அதேசமயம் இந்த படத்துக்கு சத்தியமா பொய் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

இது மட்டும் இன்றி பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.
இதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி, எச் வினோத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கும் கமிட்டாகியுள்ளாராம். இந்தத் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் நிலையில் விஜய் சேதுபதியின் மார்க்கெட் வேற லெவலில் மாறப்போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.