Homeசெய்திகள்சினிமா'அலங்கு' படக்குழுவினரை வாழ்த்திய நடிகர் விஜய்!

‘அலங்கு’ படக்குழுவினரை வாழ்த்திய நடிகர் விஜய்!

-

- Advertisement -

நடிகர் விஜய், அலங்கு படக்குழுவினரை வாழ்த்தி உள்ளார்.அலங்கு படக்குழுவினரை வாழ்த்திய நடிகர் விஜய்!

பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா தற்போது தயாரிப்பாளராக உருவெடுத்து அலங்கு என்ற திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தினை உறுமீன், பயணிகள் கவனிக்கவும் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான எஸ் பி சக்திவேல் இயக்கியுள்ளார். அறிமுக நடிகர் குணாநிதி இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அதாவது இந்த படமானது நாய்கள் மற்றும் மனிதர்களுக்கு இடையே நடக்கும் ஒரு உணர்வுபூர்வமான கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. அலங்கு படக்குழுவினரை வாழ்த்திய நடிகர் விஜய்!இந்த படம் வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. எனவே இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, இந்த படத்தின் தயாரிப்பாளர் சங்கமித்ரா நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதை தொடர்ந்து தற்போது பிரபல நடிகரும் தவெக கட்சியின் தலைவருமான விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் சங்கமித்ரா. அதன்படி நடிகர் விஜயுடன் அலங்கு படக்குழுவினர் எடுத்துக்கொள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அலங்கு படக்குழுவினரை வாழ்த்திய நடிகர் விஜய்!மேலும் நடிகர் விஜய் இந்த படத்தின் டிரைலரை பார்த்து படக்குழுவை பாராட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் நடிகர் விஜய் தன்னுடைய கையெழுத்திட்ட ஒரு புத்தகத்தையும் படக்குழுவுக்கு கொடுத்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படத்தையும் படக்குழு தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

MUST READ