- Advertisement -
மார்க் ஆண்டனி திரைப்படத்தை இந்தியில் வெளியிடுவதற்கு லஞ்சம் கேட்ட விவகாரத்தில், சிபிஐ முன்பு விசாரணைக்காக நடிகர் விஷால் மற்றும் மேலாளர் இருவரும் மும்பை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளனர்.

விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. இப்படத்தை இந்தியில் தணிக்கை செய்வதற்காக, மும்பையில் உள்ள தணிக்கை அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாகவும், 6.5 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கும் நிலை ஏற்பட்டதாகவும் நடிகர் விஷால் டிவிட்டர் தளத்தில் வேதனையுடன் வீடியோ பதிவிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், பிரதமர் மற்றும் மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரை குறிப்பிட்டு, இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கும்படியும் சமூக வலைதளத்தில் நடிகர் விஷால் கேட்டிருந்தார்.




