Homeசெய்திகள்சினிமாமார்க் ஆண்டனி படத்திற்கு லஞ்சம் கேட்ட விவகாரம்.... மும்பையில் சிபிஐ முன்பு நடிகர் விஷால் ஆஜர்...

மார்க் ஆண்டனி படத்திற்கு லஞ்சம் கேட்ட விவகாரம்…. மும்பையில் சிபிஐ முன்பு நடிகர் விஷால் ஆஜர்…

-

மார்க் ஆண்டனி திரைப்படத்தை இந்தியில் வெளியிடுவதற்கு லஞ்சம் கேட்ட விவகாரத்தில், சிபிஐ முன்பு விசாரணைக்காக நடிகர் விஷால் மற்றும் மேலாளர் இருவரும் மும்பை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளனர்.

விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. இப்படத்தை இந்தியில் தணிக்கை செய்வதற்காக, மும்பையில் உள்ள தணிக்கை அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாகவும், 6.5 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கும் நிலை ஏற்பட்டதாகவும் நடிகர் விஷால் டிவிட்டர் தளத்தில் வேதனையுடன் வீடியோ பதிவிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், பிரதமர் மற்றும் மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரை குறிப்பிட்டு, இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கும்படியும் சமூக வலைதளத்தில் நடிகர் விஷால் கேட்டிருந்தார்.

இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் இந்த பிரச்சனை தொடர்பாக விசாரணையில் இறங்கினர். மும்பையில் நடிகர் விஷால் குற்றம் சாட்டிய தரகர்கள் மற்றும் சென்சார் போர்டு அதிகாரிகள் தொடர்பாக நான்கு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நடிகர் விஷால் குற்றம் சாட்டியது போன்றே மார்க் ஆண்டனி திரைப்படத்தை இந்தியில் வெளியிட 7 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மும்பை சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக நடிகர் விஷால் நேரில் ஆஜராகி உள்ளார். உடன் அவரது மேலாளர் ஹரி கிருஷ்ணனும் விசாரணைக்காக ஆஜராகி உள்ளார். இருவரிடமும் விசாரணை என்பது சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ