Homeசெய்திகள்சினிமாகை நடுக்கம் இல்ல..!! நண்டு சிண்டுகளுக்கெல்லாம் ஒன்னு சொல்லிக்கிறேன் .. ஃபார்முக்கு வந்த நடிகர் விஷால்..

கை நடுக்கம் இல்ல..!! நண்டு சிண்டுகளுக்கெல்லாம் ஒன்னு சொல்லிக்கிறேன் .. ஃபார்முக்கு வந்த நடிகர் விஷால்..

-

- Advertisement -
கை நடுக்கத்துடன் குரலில் தடுமாற்றத்துடன் பேசிய விஷால்..... காரணம் என்ன?
அதீத காய்ச்சல் காரணமாகவே தனக்கு கை நடுக்கம் ஏற்பட்டதாகவும், தற்போது நலமாக இருப்பதாகவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிப்பில் , சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சந்தானம், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சோனு சூட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மதகஜராஜா. 12 வருடங்களுக்குப் பிறகு பல போராட்டங்களைக் கடந்து இன்று இந்த திரைப்படம் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்தப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை அடையாறில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. அப்போது நடிகர் விஷாலுல் திவீர வைரல் காய்ச்சல் காராணத்தால் கை, கால் நடுக்கத்துடன் காணப்பட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டதோடு, ட்ரெண்ட் ஆகி பேசு பொருளாகவும் ஆனது. விஷால் மதுவுக்கு அடிமையாகி விட்டார், அவருக்கு ஏதோ நோய் வந்துவிட்டது என பலரும் பேசத் தொடங்கி விட்டனர்.

மதகஜராஜா - விஷால் - சுந்தர் சி

இந்த நிலையில் ‘மதகஜராஜா’ திரைப்படத்தின் ஸ்பெஷல் பிரிமியர் ஷோ சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியம் திரையரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குனர் சுந்தர் சி, நடிகை குஷ்பூ, நடிகர் விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய விஷால், “ இந்த ஒரு நிகழ்வின் மூலமாக தான் என்னை எத்தனை பேர் நேசிக்கிறார்கள் என்று நான் தெரிந்துக் கொண்டேன். அன்று எனக்கு சாதாரண காய்ச்சல் தான் ஆனால் சற்று அதிகமாக இருந்தது. வீட்டில் அப்பா அம்மா நிகழ்ச்சிக்கு போக வேண்டாம் என்று எனக்கு சொன்னார்கள். ஆனால் கண்முன் பார்க்கும் போது சுந்தர் சி மற்றும் மதகஜராஜா போஸ்டர் இருந்தது. அதனால் தான் அன்று வந்தேன்.

Madhagajaraja

என்னை பற்றி பேசும் நண்டு சிண்டுகளுக்கெல்லாம் ஒரு விஷயம் சொல்கிறேன். இவர்கள் தான் ( நிகழ்ச்சியில் பங்கேற்ற ஊடகவியலாளர்கள்) சின்ன சின்ன விஷயங்களை எழுதுவதால் நீங்கள் எல்லாம் மீடியா ஆகிவிட முடியாது. இதுதான் நான் 20 வருடம் உங்களிடம் பெற்றுள்ள அன்பு என்றார். உங்கள் அன்பிற்கு நான் அடிமையாகி உள்ளேன், கடமை பட்டிருக்கிறேன். எனக்கு இன்னும் 400க்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் செய்திகள் படிக்காமல் உள்ளது, நிறைய பேர் என் மீது வைத்துள்ள அன்பினால் என்னை நலம் விசாரித்தனர்..

பலப்பேர் என்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என்றெல்லாம் செய்திகள் வெளியிடுகின்றனர். நான் எந்த மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படவில்லை.. மார்க் ஆண்டனி படத்தில் வருவது போல் நான் விழுவென் என்று நினைத்தீர்களோ என்று தான் சொல்வேன் . இந்த விஷயத்தை நான் இங்கு சொல்ல காரணம், எனக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் நான்  3 அல்லது 6 மாதம் ஷூட்டிங் செல்ல மாட்டேன் என்று பலர் சொன்னார்கள். அதனால் மட்டுமே நான் இங்கு இதை சொல்கிறேன்.

மதகஜராஜா - விஷால்

அதேபோல் நன்றாக இப்போது பாருங்கள் இப்போது எனக்கு எந்த கை நடுக்கமும் இல்லை. சாகும் வரை உங்கள் அன்பை மறக்கமாட்டேன் . இந்த ஆத்மார்த்தமான அன்பை நான் தலை வணங்குகிறேன், இனிமேல் பல நல்ல படங்களை கொடுப்பேன்.. என்னோட ரசிகர்களை நான் ரசிகர்கள் என்று யாரையும் சொன்னதில்லை, காரணம் அனைவரும் என்னோட நண்பர்கள், என் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள். உங்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள், இந்த பொங்கலுக்கு நீங்கள் திரையரங்கிற்கு சென்று கொடுக்க கூடிய காசிற்கு நிச்சயம் வயிறு வலிக்க சிரிப்பீர்கள்.” என்று கூறினார்.

MUST READ