spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமீண்டும் டானாக களமிறங்கும் நடிகர் யாஷ்.....'டாக்ஸிக்' பட அப்டேட்!

மீண்டும் டானாக களமிறங்கும் நடிகர் யாஷ்…..’டாக்ஸிக்’ பட அப்டேட்!

-

- Advertisement -

நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே ஜி எஃப் 1, கே ஜி எஃப் 2 உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். மீண்டும் டானாக களமிறங்கும் நடிகர் யாஷ்.....'டாக்ஸிக்' பட அப்டேட்!இந்த படம் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வசூலையும் வாரி குவித்தது. அதை தொடர்ந்து யாஷ் தனது 19 ஆவது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல நடிகையும் இயக்குனருமான கீது மோகன் தாஸ் இயக்குகிறார். இந்த படத்திற்கு டாக்ஸிக் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டு கர்நாடகா போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் இப்படமானது 2025 ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் டானாக களமிறங்கும் நடிகர் யாஷ்.....'டாக்ஸிக்' பட அப்டேட்!அதே சமயம் இந்த படத்தில் யாஷுக்கு அக்காவாக நடிகை நயன்தாரா நடிப்பதாகவும் கியாரா அத்வானி ஜோடியாக நடிப்பதாகவும் சமீப காலமாக செய்திகள் பரவி வருகின்றன. அதன்படி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்து வரும் நிலையில் படம் தொடர்பான புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இந்த படத்தில் நடிகர் யாஷ், ஸ்டைலிஷான டானாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே நடிகர் யாஷ், கே ஜி எஃப் படங்களில் (கேங்ஸ்டர்) டானாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ