நடிகை அதிதி பாலன் தமிழ் சினிமாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான அருவி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் அதிதி பாலன். அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியிருந்த இந்த படம் அதிதி பாலனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது. அதைத்தொடர்ந்து இவர் கருமேகங்கள் கலைகின்றன, கேப்டன் மில்லர், சூர்யாவின் சனிக்கிழமை போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சில வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடத்த பேட்டி ஒன்றில் அதிதி பாலன், நடிகர் விஜய் குறித்து பேசி உள்ளார். அவர் பேசியதாவது, “நடிகர் விஜயின் தீவிர ரசிகை நான். அவர் நடித்திருந்த ஷாஜகான் திரைப்படம் என்னுடைய பேவரைட் படம். ஆனால் அவர் நடித்திருந்த பீஸ்ட் படம் பார்க்க சென்றபோது படம் தொடங்கிய கால் மணி நேரத்தில் தூங்கிவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.