spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதிருமணம் குறித்த கேள்விக்கு நடிகை அஞ்சலியின் பதில்!

திருமணம் குறித்த கேள்விக்கு நடிகை அஞ்சலியின் பதில்!

-

- Advertisement -

நடிகை அஞ்சலி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் கலக்கி வருபவர். திருமணம் குறித்த கேள்விக்கு நடிகை அஞ்சலியின் பதில்!இவர் தமிழில் ஜீவாவுடன் இணைந்து கற்றது தமிழ் எனும் திரைப்படத்தில் நடித்து பெயர் பெற்றார். அதைத் தொடர்ந்து அஞ்சலி நடித்திருந்த அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் போன்ற திரைப்படங்கள் இவருக்கு சிறந்த நடிகைக்கான விருதுகளை அள்ளித் தந்தது. மேலும் இவர் ஜெயம் ரவி, அஜித், சூர்யா, விஜய் சேதுபதி, விமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். தற்போது இவர் கீதாஞ்சலி மல்லி வச்சிண்டி, ஈகை போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க நடிகை அஞ்சலியின் திருமணம் குறித்து பல வதந்திகள் சமூக வலைதளங்களில் பலமுறை பரவி வந்துள்ளது. அந்த வதந்தி தொடர்பாக நடிகை அஞ்சலி மறுப்பும் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் நடிகை அஞ்சலி தனது திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். திருமணம் குறித்த கேள்விக்கு நடிகை அஞ்சலியின் பதில்!அவர் கூறியதாவது, “சோசியல் மீடியாவில் எனக்கு மூன்று, நான்கு முறைகள் திருமணம் செய்து விட்டார்கள். இதற்கு முன்னதாக இதுபோன்ற திருமண வதந்திகள் வந்த போது வீட்டில் அனைவரும் கவலைப்பட்டார்கள். இந்த தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. நான் திடீரென ஒரு பையனை அழைத்துச் சென்று இவனை தான் திருமணம் செய்யப் போகிறேன் என்று வீட்டில் சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டார்கள். நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். ஆனால் அதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. இப்போது நான் சினிமாவில் பிஸியாக இருக்கிறேன். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ