நடிகர் அஜித் தன் அம்மாவின் நண்பர் என நடிகை பாவனா பேட்டி கொடுத்துள்ளார்.
நடிகை பாவனா மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் பிசியாக நடித்து வருபவர். அந்த வகையில் இவர் தமிழில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி வெயில், தீபாவளி, வாழ்த்துக்கள், ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் தி டோர் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. ஜெய் தேவி இயக்கியுள்ள இந்த படத்தினை ஜூன் ட்ரீம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இந்த படமானது வருகின்ற மார்ச் 28ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய பாவனா, நடிகர் அஜித் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர் பேசியதாவது, “அஜித்துடன் இணைந்து அசல் படத்தில் நடிக்கும் போது என்னுடன் என் அம்மாவும் வருவார். நான் படப்பிடிப்பை முடித்து வந்து பார்த்தால் அஜித் சாரும், என் அம்மாவும் பேசிக்கொண்டே இருப்பார்கள். என் அம்மா மலையாளத்தில் மட்டும்தான் பேசுவார்கள். ஆனாலும் இரண்டு பேரும் பயங்கரமாக பேசிக்கொண்டே இருப்பார்கள். என்னதான் பேசுகிறார்கள் என்று நான் பார்ப்பேன். இருந்தாலும் இருவருக்கும் இடையில் உள்ள நட்பை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும். நான் நன்றாக நடித்தேன் என்றால் என்னை அவர் நிச்சயம் பாராட்டுவார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட மஞ்ச வாரியருடன் படம் பண்ணும் போது அவரிடம் அஜித் சார் என்னை பற்றி விசாரித்துள்ளார். அந்த சமயத்தில் நான் சென்னையில் வேறொரு படப்பிடிப்பில் இருக்கும் போது இரண்டு பேரும் சந்தித்து பேசினோம். அடுத்தது ஒரு கன்னட படத்திற்காக நான் அஜர்பைஜான் சென்றிருந்தபோது அங்கேயும் அஜித் சாரை சந்தித்து பேசினேன்” என்று தொடர்ந்து அஜித்தை பற்றி பேசியுள்ளார்.