Homeசெய்திகள்சினிமா5 வருடங்களுக்குப் பின்னர் மலையாள சினிமாவின் ரீஎன்ட்ரி கொடுக்கும் தேவயானி!

5 வருடங்களுக்குப் பின்னர் மலையாள சினிமாவின் ரீஎன்ட்ரி கொடுக்கும் தேவயானி!

-

- Advertisement -

நடிகை தேவயானி 5 ஆண்டுகளுக்குப் பின்னர் மலையாள சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

இயக்குனர் ஷஹாத் இயக்கத்தில் அனுராகம் என்ற புதிய படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் அஸ்வின் ஜோஸ் மற்றும் கௌரி கிஷன் இருவரும் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

we-r-hiring

மேலும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகை தேவயானி இந்தப் படத்தில் நடித்துள்ளார். 5 வருடங்களுக்குப் பின்னர் அவர் மலையாள சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார். இதற்கு முன்னர் பல மலையாளப் படங்களில் தேவயானி நடித்துள்ளார். இந்தப் படத்தில் சற்று வயதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகத்தெரிகிறது. படத்தில் அவருக்கும் ஒரு லவ் ட்ராக் இருக்கிறது. பல்வேறு வயது கொண்டவர்களுக்கு இடையே ஏற்படும் காதலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

வரும் மே 5 ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆக உள்ளது.

MUST READ