Homeசெய்திகள்சினிமாகோலிவுட்டை கலக்க காத்திருக்கும் கீர்த்தி சுரேஷ்.... அடுத்தடுத்து வரிசைகட்டிய படங்கள்... கோலிவுட்டை கலக்க காத்திருக்கும் கீர்த்தி சுரேஷ்…. அடுத்தடுத்து வரிசைகட்டிய படங்கள்…
- Advertisement -

தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். அண்மையில் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் மாமன்னன். நடப்பு ஆண்டில் கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அவரது நடிப்பில் இந்த ஆண்டு மட்டும் 5 படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன.

ஜெயம்ரவியுடன் அவர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் சைரன். இப்படம் வரும் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் ரகுதாத்தா. ஹம்போலே நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதையடுத்து ரிவால்வர் ரீதா படத்தில் நடித்துள்ளார். சந்துரு இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.

அதேபோல, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் மற்றொரு திரைப்படம் கன்னிவெடி. கணேஷ் ராஜ் இந்த படத்தை இயக்குகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் இப்படம் உருவாகிறது. மேலும், இந்தியில் தெறி பட ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த ஆண்டில் மட்டும் கீர்த்தி சுரேஷின் படங்கள் அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கின்றன. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.