- Advertisement -
அனிமல் திரைப்படம் குறித்து பேசிய நடிகை குஷ்பு, படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

டோலிவுட்டில் இருந்து கோலிவுட், மோலிவுட், பாலிவுட் என அனைத்து திரையுலமும் சென்று அனைத்து மொழி ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா. இவர் இயக்கிய அர்ஜூன் ரெட்டி திரைப்படம் தெலுங்கு மட்டுமன்றி இந்திய திரையுலகிலும் மாபெரும் ஹிட் அடித்தது. மாறுபட்ட கண்ணோட்டத்தில் படத்தை இயக்குபவர் சந்தீப். இப்படத்தின் மூலம் விஜய் தேவரகொண்டாவின் மார்க்கெட்டும் உயர்ந்தது. இதையடுத்து, அர்ஜூன் ரெட்டி படத்தை இந்தியில் கபீர் சிங் என்று ரீமேக் செய்தார்.


இதைத் தொடர்ந்து சந்தீப் ரெட்டி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் அனிமல். இப்படத்தில் பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகராக வலம் வரும் ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.அப்பா மகன் பாசத்தை தழுவி எடுக்கப்பட்டிருந்த இத்திரைப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் பல தரப்பட்ட விமர்சனங்களை பெற்றது. பலர் படத்திற்கு எதிராக கண்டனங்களை எழுப்பினர். படத்தை தடை செய்யவும் கூறினர். திரை நட்சத்திரங்கள் மட்டுமன்றி அரசியல் தலைவர்களும் படத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.



