spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'சப்தம்' படத்தில் இணைந்தார் நடிகை லைலா

‘சப்தம்’ படத்தில் இணைந்தார் நடிகை லைலா

-

- Advertisement -

‘சப்தம்’ படத்தில் இணைந்தார் நடிகை லைலா

ஈரம் படத்தின் வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி, இசையமைப்பாளர் தமன் கூட்டணியில் உருவாகும் ‘சப்தம்’ படத்தின் ஒவ்வொரு தகவல்களும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. இந்நிலையில் படத்தின் முக்கிய பாத்திரத்தில் நடிக்க, நடிகை லைலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

we-r-hiring

சமீபத்தில் இப்படத்தில் நாயகியாக, நடிகை லக்‌ஷ்மி மேனன் இணைந்தார். இந்நிலையில் அடுத்ததாக தற்போது, முக்கியமான பாத்திரத்தில் நடிக்க, நடிகை லைலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
லைலாவின் கதாப்பாத்திரம் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் ஆச்சர்யம் தரும் வகையிலும், மிக அழுத்தமான பாத்திரமாகவும் இருக்குமென படக்குழு தெரிவித்துள்ளது.

காமெடி ஹாரர் படங்களுக்கிடையில் ஒரு இனிமையான மாற்றமாக இதயத்தை அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகிறது.படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ